இந்தியாவில் வேலையின்மை நிலையை ஒழிக்க உங்களால் சில கருத்துக்கள் கூற முடியுமா?
ஒரு மனிதன் தனது குடும்ப வருமானத்திற்கும் வளர்ச்சிக்குமாக அவன் எடுக்க வேண்டிய முயற்சிகள்- உழவு, தொழில், வணிகம், தனித்திறன், ஒப்பந்தம், வேலை இப்படி ஆறு வகையின. நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டு நிலத்தை உழுது பயிர் விளைவிப்பது உழவு. அனைத்துத் துறைக்குமான கருவிகள் இயந்திரங்கள், இயந்திரங்கள் வடிவமைப்பது தொழில். விளைவித்த பயிரையோ, வடிவமைத்த கருவிகளையோ வாங்கி விற்பது வணிகம். நடிப்பது, பாடுவது, விளையாடுவது, வரைவது, எழுதுவது இவை தனித்திறன். ஒரு கட்டிடம், அல்லது ஒரு தொழிற்சாலை வடிவமைத்தல், கணினிமயமாக்கல், மின்மயமாக்கல் எல்லாம் ஒப்பந்த அடிப்படையில் முடித்துத் தருவது ஒப்பந்தம். இந்த அனைவரின் நிறுவனங்களில் உடலுழைப்புக் கூலியாகவோ, நிருவாகக் கூலியாகவோ சம்பளத்திற்கு அவர்கள் சொல்கிற வேலையை அவர்கள் சொல்கிறபடி செய்து தருவது வேலை. ஆக வேலையின்மை நிலை இல்லை என்பதாக ஏராளமான வேலைவாய்ப்புகளை இந்த நான்கு நிறுவனங்கள்தாம் உருவாக்கித்தர முடியும். இந்த நிறுவனங்களை அரசும் முன்னெடுக்கலாம். நீங்களும் நானும் கூட முன்னெடுக்கலாம். இந்த நான்கும் உடைமைகள் என்ற தலைப்பில் வரும். தமிழர் பெருமைகளை தமிழர் நடுவே நிலைநாட