எஸ் வங்கி திவாலாகியதை போல சங்க காலத்தில் வங்கி போன்ற அமைப்புகள் திவாலாகியிருக்கிறதா? அதைப் பற்றி சங்கப் புலவர் எழுதிய பாடல் இருக்கிறதா?
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். என்பது இந்தக் குறளின் பொருளாகும்.
பேங் என்பதற்கான சொல்கூட தமிழில் இல்லை. பேங் என்பதை நாம் ஒலிமாற்றம் செய்து தமிழில் வங்கி என்கிறோம். தற்காலத்தில் இணையங்களில் எளிமையாக இடுகைகளை பகிர்வுசெய்வது போல சங்க காலத்தில் பொருளை இல்லாதவர்களுக்கு பகிர்வுசெய்வது எளிமையாக நடந்தது.
வள்ளல் தன்மை சங்க காலத்தில் பெரிதும் போற்றிக் கொள்ளப் பட்டது. எனவே கடன் கொடுத்து வாங்குதல் அதுவும் வட்டிக்கு கடன் கொடுத்தல் என்பதெல்லாம் பழந்தமிழரிடம் வழக்கமேயில்லை.
பிற்காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக தஞ்சாவூர் புதுக்கோட்டை பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் மொய் வாங்கும் திட்டத்தில் கூட வட்டி வசூல் எல்லாம் கிடையாது.
வருமான வரி, வரி ஏய்ப்பு, தண்டனை என்று பணத்தை புழங்க விடாமல் தடுக்கிற காரணம் பற்றியே வாரக்கடன் எல்லாம் சாத்தியமாகி வங்கி திவால் ஆகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக