மற்றவர் மனதை காயப்படுத்தாமல் தவறை சுட்டிக்காட்டுவது எப்படி?
வேற்றுமை யின்றி கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா வொழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.
என்பது நாலடியார் தெரிவிக்கும் படர்க்கை நிலை அறிவுரை.
முன்னிலையில் ஒருவரைக் குற்றம் சொன்னால் அது நமக்கு நாம் செய்து கொள்ளுகிற தீங்கே. நீங்களாக விரும்பிக் கேட்டதால் நான் உங்களுக்கு படர்க்கை நிலை அறிவுரையை எடுத்துக் காட்டுகிறேன். என்னிடம் இருந்து அறிவுரை சொல்ல நான் முயலவில்லை. நீங்கள் கேட்டு, நான் சொல்லும் அறிவுரைக்கே நான் இவ்வளவு பாதுகாப்பு தேடவேண்டியுள்ளது. கேட்காமல் ஒருவருக்கு அறிவுரை சொல்லலாமா? அருள்கூர்ந்து தெளிவு படுத்துங்கள்.
கூடுதல் தகவல்களுக்கு உங்கள் தலையெழுத்தை நீங்கள்தாம் எழுதிக் கொள்கின்றீர் என்கிற நூலை வாங்கி படிக்கலாம். இந்த நூலை படிக்கவோ, விலைக்கு வாங்கி உங்கள் மின்னூலகத்தில் வைத்துக் கொள்ளவோ, கீழே உள்ள நூலின் படத்தைத் தொட்டால் உரிய இணைப்பிற்குள் செல்ல முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக