ஐயா என்பதை அய்யா என்று அழைப்பது சரியா?
தொல்காப்பியம் உயிர்-12, மெய்-18 என முதலெழுத்துக்கள் முப்பது என்றும், சார்பெழுத்துக்கள் உயிர்மெய்-216 எனவும் எழுத்து வடிவங்களைத் சுட்டி நிற்கிறது
குமரன் இதழ் ஆசிரியர் முருகப்பா பயன்படுத்திய மாற்றங்களையும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அய், அவ் ஒலி மாற்றங்களையும் சேர்த்து திருத்தி ஒரு வரிவடிவத்தைப் புகுத்தி தொடந்து குடியரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினர். (அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ)
எம்ஜியார் ஆட்சியில், பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாகப் பெரியார் பயன்படுத்தி வந்த இந்த வரி வடிவத்தில் அய், அவ் தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் அரசு இச்சீர்திருத்தத்தை ஏற்று, பொங்கல் திருநாள் முதல் செயற்படுத்தியது. அதனால் தமிழில் ‘ஐ’காரத்தை புறந்தள்ள முடியாது. அதனால் அய்யா என்று எழுதக்கூடாது ஐயா என்றே எழுத வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக