சில நாடுகளில் சில அபத்தமான சட்டங்கள் யாவை?


சில நாட்டில் சில அபத்தமான  சட்டங்கள் என்ன? எல்லா நாட்டிலும் சட்ட அடிப்படையில் மாற்றம் தேவை.
‘அம்மா! அண்ணன் அடிச்சிட்டான்’
தாயின் தண்டனை நிறைவேற்றம்;
அண்ணனுக்கு இரண்டு அடிகள். குற்றம் செய்யாமல் தாய் கொடுத்த தண்டனையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தந்தை வந்ததும் தொடர்கிறது மேல்முறையீடு.
தம்பியின் பொய்க்குற்றச்சாட்டு அம்பலமாகிறது. அண்ணனை தாய் அரவணைக்கிறாள். பரிசுப் பொருள்களோடு தந்தையின் சமாதானம். இது தமிழ்க் குடும்ப ஐயாயிர ஆண்டுகால பழமையின் வெளிப்பாடு.
இன்றைய அயலியல் சட்டசமுக அமைப்பின் சாராய வணிகம், வரி, வட்டி, இவைகளே அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமும் ஆகி- தமிழ்க் குடும்பத்தில் அமைந்த பெற்றோர் போல, மூன்றாவது வாதியாக சட்டசமூகம் நிறுத்தப்படுவது இல்லை.
அதனால் மேல்முறையீட்டில் பொய் வழக்கு புலப்பட்டாலும் பாதிக்கப் பட்டவனுக்கு இழப்பீடு ஏதும் இல்லை. சீர் செய்ய- தமிழ்ச் சான்றோர்கள் எழவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

பாலியல் கல்வி

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்