பரதநாட்டியம் பெயர் காரணம் என்ன?


தமிழர் ஆடற்கலை நெடிய வரலாறு கொண்டது. முத்தமிழில் அதுதான் முதல்தமிழ். சைகை நிலை மொழி: நாடகத்தமிழ். கூவி அழைக்கிற அளபெடை நிலை மொழி: இசைத்தமிழ். உரைநடையாக இயல் படைக்கிற மொழி: இயற்றமிழ் என்று, உலக மொழிகளில் மொழி வரலாற்றை சைகை நிலையிலிருந்து போற்றிக் கொள்கிற ஒரே மொழி தமிழ் மட்டுமே.

முதலாவதாக சைகை மொழியாக நாடகத்தமிழ் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கருத்துக்களை வெளியிட முன்னெடுக்கப்பட்டு பின்னர் கலையாக வளர்ந்து வந்து கொண்டேயிருந்தது. முதல் தமிழான நாடகத்தமிழ் கலை வடிவமாகிற போது நாட்டியம், ஆடற்கலை என்று பேசப்பட்டது.
மேலும் தமிழர் ஆடற்கலையில் நூற்றுக்கணக்கான வடிவங்கள் முன்னெடுக்கப் பட்டன. பெரும்பாலான ஆடல்கள் குழுவாக ஆடப்படுபவை. அதில் தனித்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்த ஆடல் கலைதான் சதிர் ஆடற்கலை. அதனாலேயே தமிழர் ஆடற்கலைகளில் அது மட்டும் தனித்து வளர்ந்தது. அதில் காலங்காலமாக ஒவ்வொருவரும் கூடுதலான பாவனைகளை முன்னெடுத்தார்கள்.
சோழர்கள் அதை கோயில்களில் முன்னெடுத்தார்கள். அந்தக்கலைப் பெண்களை பார்ப்பனியர்கள் தவறாகப் பயன்படுத்திய நிலையில் அது தேவராட்டம் என்றெல்லாம் பேசப்பட்டு பொதுமக்களால் வெறுக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் மிக அண்மை காலத்தில் ருக்மணி அருண்டேல் என்கிற பார்ப்பனியப் பெண்ணால் அது மெருகேற்றப்பட்டு பரத நாட்டியம் என்று பெயர் சூட்டப்பட்டது. இன்று அதை முழுமையாகப் பார்ப்பனியர்கள் எடுத்துக் கொண்டு அண்மைக்கால பரத நாட்டிய வடிவத்திற்கு தொன்மை கற்பிக்க பெயர்காரணத்திற்கு என்னென்னவோ கதைகட்டுகிறார்கள்.

தமிழர் ஆடற்கலை வகைகள்:
அம்மன் கோயில் ஆட்டம்
அம்மன் கூத்து
அன்னக்கொடி விழாக்கூத்து
ஆலி ஆட்டம்
இடையன் இடைச்சி கதை
இருளர் இனமக்களின் ஆட்டம்
இலாவணி
எக்காளக்கூத்து
உடுக்கைப்பாட்டு
உறுமி
உறுமி கோமாளி ஆட்டம்
உருமி ஆட்டம்
உறியடி ஆட்டம்
ஒட்ட நாடகம்
ஒயில் கும்மி
ஒயிலாட்டம்
கட்சிப்பாட்டு
கட்டைக்குழல்
கட்டைக் காலாட்டம்
கணியன் ஆட்டம்
கதை வாசிப்பு
கப்பல் பாட்டு
கரகாட்டம்
கரடியாட்டம்
கருப்பாயி ஆட்டம்
கருப்பாயி கூத்து
களியலாட்டம்
கமுவேற்ற விழாகூத்து
கழைக்கூத்து
களரி
களமெழுத்தும் பாட்டும்
காவடி
காமாட்டா
காமன் எரிப்பு ஆட்டம்
காலடியாட்டம்
காளை ஆட்டம்
காளியாட்டம்
கானாப்பாட்டு
கும்மி
கும்மிக்கூத்து
கும்மி குறத்திக்களி
குறவன் குறத்தி ஆட்டம்
குரவை, துணங்கை
கைச்சிலம்பாட்டம்
கையுறை பாலைக்கூத்து
கொக்கலிக்கட்டை ஆட்டம்
கொறத்திகளி ஆட்டம்
கோத்தர் மக்களின் ஆட்டங்கள்
கோடாங்கி பாட்டு
கோணாங்கி ஆட்டம்
கோலாட்டம்
கோயிலாட்டம்
கோமாளி ஆட்டம்
சக்கையாட்டம்
சக்கை குச்சியாட்டம்
சலங்கை ஆட்டம்
சாமியாட்டம்
சிண்டு நடனம்
சிலம்பாட்டம்
சிலா ஆட்டம்
செனக்குத்து ஆட்டம்
சேர்வையாட்டம்
சேலையாட்டம்
சேவையாட்டம்
சோழவர் ஆட்டம்
இப்படி பட்டியல் நீளும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்