இந்தியாவில் வேலையின்மை நிலையை ஒழிக்க உங்களால் சில கருத்துக்கள் கூற முடியுமா?


ஒரு மனிதன் தனது குடும்ப வருமானத்திற்கும் வளர்ச்சிக்குமாக அவன் எடுக்க வேண்டிய முயற்சிகள்- உழவு, தொழில், வணிகம், தனித்திறன், ஒப்பந்தம், வேலை இப்படி ஆறு வகையின.
நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டு நிலத்தை உழுது பயிர் விளைவிப்பது உழவு.
அனைத்துத் துறைக்குமான கருவிகள் இயந்திரங்கள், இயந்திரங்கள் வடிவமைப்பது தொழில்.
விளைவித்த பயிரையோ, வடிவமைத்த கருவிகளையோ வாங்கி விற்பது வணிகம்.
நடிப்பது, பாடுவது, விளையாடுவது, வரைவது, எழுதுவது இவை தனித்திறன்.
ஒரு கட்டிடம், அல்லது ஒரு தொழிற்சாலை வடிவமைத்தல், கணினிமயமாக்கல், மின்மயமாக்கல் எல்லாம் ஒப்பந்த அடிப்படையில் முடித்துத் தருவது ஒப்பந்தம்.
இந்த அனைவரின் நிறுவனங்களில் உடலுழைப்புக் கூலியாகவோ, நிருவாகக் கூலியாகவோ சம்பளத்திற்கு அவர்கள் சொல்கிற வேலையை அவர்கள் சொல்கிறபடி செய்து தருவது வேலை.
ஆக வேலையின்மை நிலை இல்லை என்பதாக ஏராளமான வேலைவாய்ப்புகளை இந்த நான்கு நிறுவனங்கள்தாம் உருவாக்கித்தர முடியும். இந்த நிறுவனங்களை அரசும் முன்னெடுக்கலாம். நீங்களும் நானும் கூட முன்னெடுக்கலாம்.
இந்த நான்கும் உடைமைகள் என்ற தலைப்பில் வரும்.

தமிழர் பெருமைகளை தமிழர் நடுவே நிலைநாட்டாமல் தமிழர்களுக்காக எதையும் சாதிக்க முடியாது. தமிழர் பெருமைகளைத் தமிழரிடையே நிலைநாட்டுவது என்பது குதிரைக் கொம்பே. ஏனென்றால் நடைமுறையில் தமிழர் யாரும் தமிழராக இல்லை. ஆரியச்சார்பில் சிலர், அராபியச் சார்பில் சிலர், ஐரோப்பியச்சார்பில் சிலர், மார்க்சியச்சார்பில் சிலர், பல்வேறு மதச்சார்புகளில் சிலர் என அந்தந்தச் சார்புகளில் வாழ்மானிகளாகவும்- அந்தந்த சார்புகளுக்கு வெளியே சிந்திக்கத் தூண்டுபவர்களும் உணர்ச்சியில் மட்டுமே தமிழியல் நிலைபாடாகவும் நடைமுறையில் அவர்களும் வேறு அயலியல் சார்பில் திளைக்கிற நிலையில் தமிழர்களை ஒருங்கிணைக்கிற முயற்சி எப்போதும் யாராலும் தோல்வியை நோக்கியே எடுத்துச் செல்லப் படுகிறது.
முதலில் ஒரு விழுக்காடு தமிழராவது உலகளவில் பட்டியலிடப் படுகிற உடைமையாளராக உயர்ந்தாக வேண்டும்.

உடைமை.
இந்தத் தலைப்பில் இருந்து தமிழர்கள் விலகி பல ஆயிரம் ஆண்டுகளாகி விட்டன.
தமிழகத்தின் வேளாண்மை, தொழில்கள், வணிகம், கலை, கல்வி, என்று எந்தத் துறைக்கும் தமிழன் உடைமையாளனாக இல்லை. ஆனால் எல்லாத் துறைகளிலும் உலகளாவி தமிழன் இருக்கிறான்; உடல் உழைப்புக் கூலியாகவோ அல்லது நிருவாகக் கூலியாகவோ.
சுந்தர் பிச்சை அண்மைக் கால தமிழர் பெருமை; உலகின் மிகப் பெரிய நிறுவனத்திற்கே தலைவராம். உடைமைத் தளத்தில் பில்கேட்ஸ், அம்பானி என்று மட்டுமே பட்டியல் போடுவார்களாம்.
ஆனால் கூலித் தளத்திற்கு தமிழர்கள் மட்டுந்தானாம்.
அன்னியர் ஆட்சியில்தான் கப்பலோட்டிய தமிழன் உடைமையாளராக முயற்சித்தார் என்று செக்கிழுத்தார் என்றால் இன்றைக்கும் அப்படித்தான். தமிழன் தொழில் அதிபராகவோ, வணிகராக, வளர்ந்துவிடாமல் தடுக்க சட்ட நிருவாகத்தில் ஏழாயிரம் கிடிக்கிப் பிடிகள்.
சுயமாக முன்னேறி விடாமல் தடுக்க சாராயக் கடைகள்.
உடைமையாளனை உருவாக்க கல்வி கிடையாது. எல்லாக் கல்வி நிறுவனங்களும் நிருவாகக் கூலிகளை உருவாக்கவே. அந்தக் கல்வி நிறுவன முதலாளிகளாகக் கூட தமிழர்கள் வந்து விடமாட்டர்கள். நிருவாகக் கூலிகளை உலகளாவி உருவாக்குவதற்கென்றே ஆங்கில வழிக் கல்வி. தமிழன் உடைமை குறித்து சிந்திக்காத வரை தமிழனுக்கு விடிவேயில்லை.
கூலிக்காரனுக்கு முதலாளி மொழிதான் தேவை.(நாய்களுக்கு வளர்ப்பவன் போடும் எலும்புக்காக அவன் மொழியைக் கற்று வாலாட்ட வேண்டிய தேவையிருகிறது. நாயின் மொழி நாய்களோடு சண்டை போடுவற்கு வெறும் குரைப்பாக மட்டும் போதுமானது.)
தமிழர்கள் உடைமை குறித்து சிந்திக்கும் போது மட்டுமே முதல் உடைமையான தாய்மொழியைக் தக்க வைக்கவைக்க முடியும்.
2.குடும்பம்
3.வீடு
4.கல்வி
5.கலை
6.இலக்கியம்
7.தொழில்
8.கருவிகள்
9.உடை,அணிகலன்
10.உணவுகள்
11.வணிகம்
12.நாடு
13.அரசு
14.நீராதாரம்
15.கோயில்
16.நிதி
17.நீதி
18.பாதுகாப்பு
19.பண்பாடு
20.வரலாறு
ஆகியவற்றில்
உடைமையாளனாக மாறு!
உன் தமிழனம் இழந்த அனைத்தும் கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்