ஒரு கவர்ச்சியான நிதி ஊக்கத்தொகை உங்களுக்கு வழங்கப்பட்டால், உங்கள் பெயரை மாற்றுவீர்களா?


என்னுடைய பெயரே மாற்றப்பட்ட பெயர்தான். யாரும் இதுவரை வைத்துக் கொண்டிராத பெயராக தெரிவு செய்து அமைத்துக் கொண்டது மூன்றாவது நோக்கம். கணியக்கலை அடிப்படையில் தனிமுடிவு மற்றும் போரியல் என்கிற இயல்புக்கு உரிய எண் ஒன்பதில் என்னுடைய பெயரை அமைத்துக் கொண்டேன். அது இரண்டாவது நோக்கம். முதல் நோக்கம் என்னுடைய பெயர் தனித்தமிழில் இருக்க வேண்டும் என்பது.
என்னுடைய பிள்ளைகளுக்கு அழகிய தனித்தமிழில் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறேன். உறவினர் பலரின் குழந்தைகளுக்கும் அழகிய தனித்தமிழ் பெயர்களை சூட்டியிருக்கிறேன். கேட்கும் நண்பர்களுக்கு அழகிய தனித்தமிழ் பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறேன். அனைத்து பெயர்களும் கணியக்கலை அடிப்படையில் இயல்புகளையும் தெரிவு செய்தே.
இந்த நோக்கங்களுக்கு மாறுபாடு இல்லாமல் என்பெயரை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு பணம் தரவேண்டாம். நான் பரிந்துரைக்கிற ஓர் தமிழ் அமைப்புக்கு ஒரு இலட்சத்திற்கு குறையாமல் பணம் கொடுக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்