தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?


மந்திரத்தால் மரத்திலிருந்து மாங்காய் விழ வைக்க முடியுமா? என்று கேட்டால் முடியும் என்பதுதான் விடை.

உங்கள் வீட்டில் ஒரு மாமரம் வளர்ந்திருக்கிறது. அந்த மரத்தில் நிறைய மாங்காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒருநாள் நீங்கள் அந்த மரத்தடிக்குச் சென்று இந்த மரத்தில் இருந்து எனக்காக ஒரு மாங்காய் விழவேண்டும் கேட்கின்றீர்கள். மாங்காய் விழாது. அப்படி ஒரேயொரு முறை கேட்டு உலகத்தில் யாராலும் மாங்காய் விழ வைக்க முடியாது.

அப்படி விழவைத்துக் காட்டினால் அது வித்தை (மேஜிக்) அப்படி வித்தைக்காரர்கள் உலகத்தில் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மந்திரக்காரர்கள் அல்ல.

ஆனால் உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மந்திரக்காரர்கள் தாம். நம் வாழ்க்கைக்காக நம் தலைஎழுத்தை நாம்தான் எழுதிக் கொள்கிறோம்.

நாம் மாங்காய் விழ வைப்பதற்கு அன்றாடம் மரத்தடிக்குச் சென்று, ‘இந்த மரத்தில் இருந்து எனக்காக ஒரு மாங்காய் விழவேண்டும்’ ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருநாள் நீங்கள் வியப்படைகிற படிக்கு மாங்காய் விழும். அல்லது யாராவது உங்கள் வீட்டிற்கு வந்தவர்கள், அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்கள், அல்லது அணில், அல்லது வெளவால் உங்களுக்கு அதைப்பறித்து போடும். உங்கள் கோரிக்கை மட்டும் நிறைவேறும். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தரும் நபரோ, காலமோ உங்கள் தீர்மானத்திற்கு அப்பாற் பட்டது.

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

அந்த மந்திரத்தை நீங்கள் தான் உருவாக்க வேண்டும். குழப்பாமல் மந்திரத்தை உருவாக்கவேண்டும். மந்திரத்தில் கால நிர்ணயம் செய்யக் கூடாது.

மந்திரத்தை அன்றாடம் ஒருமுறையாவது மனதில் வேண்டிக்கொள்ள வேண்டும். ஒரேமாதிரி வேண்டிக்கொள்ள வேண்டும்.
உங்கள் நோய் தீருவதற்கு ஒரு மருத்துவரோடான தொடர்பு உங்களுக்கு உறுதியாகக் கிடைக்கும். மருந்தில்லாத நோய்க்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்