அறங்கூற்றுவர்கள் தெய்வபக்தி கொண்டவர்களா.
அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்கிற சிறப்பான தமிழ்ச் சொலவடை கருதி அறங்கூற்றுவர்களுக்கு தெய்வபக்தியை நீங்கள் முன்வைக்கின்றீர்கள் என்று கருதுகிறேன்.
அன்று கொன்ற அரசுக்கும் சரி, நின்று கொல்லுகிற தெய்வத்திற்கும் சரி. நியாயம் நியாயமின்மைகளை அலசி ஆராய- அரசனுக்கு சமுதாய பக்தியும், தெய்வத்திற்கு சமுதாயப்பார்வையும் தேவை.
இன்றைய அறங்கூற்றுவருக்கும் தேவை! சமுதாயத்தின் மீதான பார்வையும், சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் சமுதாயத்தின் மீது பக்தியும்.
அறங்கூற்றுவர்கள் என்னேவோ அரசு போலவும், தெய்வம் போலவும் மதிக்கப்படத்தான் படுகின்றார்கள். ஆனால் அறங்கூற்றுவர்கள் அரசு ஊழியர்கள். அவர்கள் அரசு ஊழியர்களாகவேயிருக்கின்றார்கள். என்ன சொல்ல வருகிறேன் எனில்- அவர்களுக்கு அரசபக்தி இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக