தமிழ் நாட்டில் மதுவிலக்கு தேவை என்பதை உணர்ந்து எந்த அரசியல் தலைவர் அல்லது கட்சி அதை உண்மையாக நிறைவேற்ற முடியும்?
திமுக, அதிமுகவிற்கு மதுவிலக்கை அமல் படுத்தி பொருளாதார முடையில்லாமல் தமிழ்நாட்டை நிருவாகிக்க துணிச்சல் இல்லையென்பதை நாம் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டுவரப்படாததைக் கண்டித்து காந்தியவாதியான சசிபெருமாள் தொலைபேசிக் கோபுரத்தின் மீது ஏறி நடத்திய போராட்டத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தின் எதிரொலியாக மதுபானக் கடைகளை அடைக்கக்கோரி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கடையடைப்புப் போராட்டம், டாஸ்மாக் மதுக்கடைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களெனப் போராட்டங்கள் வலுப்பெற்றன.
மற்றபடி தன்னூக்கமாக மதுவிலக்கை அமல்படுத்துதல் குறித்த அரசியல் தலைவரோ, அரசியல் கட்சியோ இல்லை என்பதே உண்மை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று பாமக, மதிமுக, தேமுதிக, விசிக, நாம்தமிழர்கட்சிகள் தெரிவிக்கின்றன. இதில் நாம்தமிழர் கட்சி தவிர பாமக, மதிமுக, தேமுதிக, விசிக ஆகியன கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்;ற கட்சிகள் இவை கூட்டணிகட்சிகள் இழுத்த இழுப்பிற்கு வளைந்து கொடுப்பன. தனித்து நிற்கும் நாம்தமிழர்கட்சிக்கு ஒருவேளை ஆட்சி கிடைத்தால், வீம்புக்காகவாவது மதுவிலக்கை அமல் படுத்தி பார்ப்பார் சீமான்.
கருத்துகள்
கருத்துரையிடுக