தற்போது இந்திய கைபேசி சந்தையில் போட்டிக்கு கூட ஒரு இந்திய நிறுவனமும் இல்லாததற்கு காரணம் என்ன?
ஒருகாலத்தில் சுமார் 50விழுக்காடு சந்தையைக் கட்டுப்படுத்தி வந்த மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன், இண்டெக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் தற்போது தள்ளாடி வருகின்றன.
அவைகளால் தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங், சீனாவைச் சேர்ந்த விவோ, ஓப்போ, சியோமி, அமெரிக்காவின் ஆப்பிள் ஆகியவைகளோடு விலையில் போட்டி போட முடிந்த அளவிற்கு, தரத்தில் போட்டி போட முடியவில்லை. இந்திய அரசும் கூட அதற்கு உறுதுணையாய் அமையவில்லை. மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன், இண்டெக்ஸ் செல்பேசி வாங்கி விட்டு பழுதுநீக்கும் சேவை மையங்களிலேயே தவமிருந்தவர்கள், இப்போது இந்த வெளி நாட்டு பேசிகளை வாங்கியதால் அந்தத் தொல்லையில்லை என்று மகிழ்ச்சியாகப் பேசியும் வருடியும் மகிழ்கின்றார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக