இடுகைகள்

‘ஆடற்கலை’யாகவும், ‘சதிர்’ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை பரதநாட்டியம் ஆக்கிய உருக்மிணி தேவி அருண்டேல்

படம்
பழந்தமிழகத்தில் 'ஆடற்கலை'யாகவும், பிற்காலச் சோழர் காலத்தில் 'சதிர்'ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை தங்கள் இனத்தார் இழிவாகக் கருதியிருந்த நிலையில், அந்த நடனத்தை சிறப்புறக் கற்று, பரதநாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்து, அதை தங்கள் இனத்தார் பெருமையாகக் கொண்டாடும் கலையாக மாற்றிய பெருமைக்குரியவர் உருக்மிணி தேவி அருண்டேல்! பிரித்தானிய இந்தியாவில் மதுரை மாநகரில், நூற்றுப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர், உருக்மிணி தேவி அவர்கள். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். பழந்தமிழகத்தில் 'ஆடற்கலை'யாகவும், பிற்காலச் சோழர் காலத்தில் 'சதிர்'ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை தங்கள் இனத்தார் இழிவாகக் கருதியிருந்த நிலையில், அந்த நடனத்தை சிறப்புறக் கற்று, பரதநாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்து, அதை தங்கள் இனத்தார் பெருமையாகக் கொண்டாடும் கலையாக மாற்றிட முனைப்புடன் செயல்பட்டவர்.  விடுதலை பெற்ற இந்தியாவில், 42 ஆண்டுகளுக்கு முன்பு மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தவர் என்கிற சிறப...

பாலியல் கல்வி

படம்
கல்வி இரண்டு வகைப்படும். ஒன்று சமுதாயக் கல்வி. மற்றொன்று நிறுவனக்கல்வி. சமுதாயக் கல்வி புலமையைத் தருகிறது. நிறுவனக்கல்வி மதிப்பெண்களையும் சான்றிதழ்களையும் தருகிறது.  நிறுவனக் கல்வியில் பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரவுகள் 1.தமிழ் (தாய்மொழி) 2.ஆங்கிலம் (பிறமொழி) 3.கணக்கு 4.சமுகவியல் (வரலாறு மற்றும் நிலவியல்) 5.இயல்அறிவு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை விருப்பப்பாடமாக பட்டப்படிப்பாக முனைவர் படிப்பாக பயிற்றுவிக்கிறது நிறுவனக் கல்வி. அந்த படிப்பைப் படிக்க விரும்புவோரை நுழைவுத் தேர்வு வைத்து பலருக்கு மருத்துவம் கற்பதற்கான தடையை விதிக்கிறது நிறுவனக் கல்வியில் அதிகாரம் பெற்ற அரசு.  இன்னும் சிறப்பாக- பாலியல் கல்வி என்ற ஒன்றைக் கல்விநிறுவனத்தின் மூலமாகத் தொடரப்பட வேண்டும் என்பது பலரின் பேசு பொருளாக இருக்கிறது. நிறுவனக்கல்வி முன்னெடுக்கிற முதாலாவது படிப்பான 1.தமிழை (தாய்மொழி) சமுதாயக் கல்வி ஐந்து அகவைக்குள் பேசும் வகைக்கு கற்றுக்கொடுத்து முடித்து விடுகிறது.  எழுதும் வகைக்கு மட்டுந்தாம் நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. மேலும் பட்டப்படிப்பு வரை நிறைய தகவல்களை படிக்க வைத்து அவர்களுக்...

பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது?

படம்
  உலக மொழிகள் எல்லாமே தங்கள் மொழியை அடிப்படையான கட்டமைப்புகளோடு வளர்ப்பதற்கு முன்னாலேயே அடுத்த மொழியைச் சந்திக்க வேண்டிய நிலை அம்மொழிகளுக்கு அமைந்தது. காரணம் உலகினர் எல்லோருமே ஆற்றங்கரையைத் தேடி நாடோடி வாழ்க்கை மேற்கொண்டவர்கள்தாம். ஆகவே உலக மொழிகள் அனைத்திற்கும் ஒன்றோறொன்றான தொடர்புகள் மிகுதியாகவே காணப்படும்.  ஆனால் தமிழ்மொழியோ சங்கம் கண்டு உறுதியான கட்டமைப்பில் வளரும் வரை பிறமொழிகள் இருப்பதை அறியாமலேயே தனித்து வளர்ந்து கொண்டிருந்தது. காரணம் தமிழர் முப்புறம் கடல் சூழ்ந்து நான்காவது புறம் உலகப் பெரும்மலை அமையப்பெற்ற நாவலந்தேயம் என்ற பெரும்பகுதியை கொண்டிருந்ததும், தமிழர் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலையாமல், தாம் வாழந்த நிலம் நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும், தாழ்வான பள்ளமாக இருந்தாலும் அதனை வாழுமிடமாக்கிக் கொள்ளும் இயல்பினராய் இருந்தனர் என்பதும் ஆகும். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்கிற தமிழர்தம் நிலப்பகுப்பும்- நாடாகொன்றோ காடாகொன்றோ அவலாகொன்றோ மிசையாகொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.  என்கிற புறநானூற்றுப் பாடலும் இதற்கா...

பெருமளவான ஈழத்தமிழர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை ஆதரிப்பது ஏன்?

படம்
நண்பர் கோபிநாத் தமிழ்கோராவில் இந்த பதிலை எழுதியிருக்கிறார். இந்த பதிலின் ஒவ்வொரு எழுத்தையும் நான் அங்கீகரிப்பதால் இதை எனது மந்திரம் வலைப்பூவில் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.    ஈழத்தில் அரசியலே இருந்ததில்லை. நம்பமுடியவில்லையா? உண்மை அதுதான். தந்தை செல்வாவின் ( ஈழத்தின் காந்தி) காலத்தின் பின்பு தமிழர்கள் அரசியலை வெறுத்தார்கள். காரணம் இலங்கை அரசியலில்தமிழர்களின் உரிமைகள் எங்கும் இல்லை. அரசியல் மூலமாக எதையுமே பெறமுடியாது. கல்வியில் சிங்களப்பிள்ளைகள் எல்லாம் பல்களைக்கழகம் செல்ல தமிழ்ப்பிள்ளைகள் மிகப்பெரும் சவால்களை சந்திக்கவேண்டும். அப்படி அற்புதம் நிகழ்ந்தால் தான் செல்லமுடியும். உதாரணமாக 3s எடுத்த ஒருவர் சிங்கள தேசத்தில் பல்கழைக்களகம் சென்றால் இங்கே 2A B எடுக்கவேண்டும். இந்தக்கொள்கை வந்ததும் தமிழர்கள் கல்வியில் நம்பிக்கை இழந்து ஆயுதப்போராட்டத்தில் இணைந்தார்கள். ஆயுதப்போராட்டாம் வலுப்பெற்ற காலத்தில் ஈழத்தில் அரசியல் கட்சிகளோ தலைவர்களோ எல்லாம் இல்லை. அது சிங்கள தேசங்களில் நடக்கும். சிங்கள மக்கள் தமக்கான தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஈழத்தில் நிர்வாகத்தை புலிகள் நடத்தினார...

விளம்பரத்தைப் பார்ப்பதற்கு வருமானம்.

படம்
  வருமானம் ஈட்ட ஒரு வகை கண்டோம் வாருங்கள் தமிழர்களே. சும்மா கொஞ்ச கொஞ்ச நேரம் விளம்பரத்தைப் பார்ப்பதற்கு வருமானம். விளம்பரம்தான் வணிகத்தின் அடிப்படை என்பதால் விளம்பரம்தாம் வருமானத்திற்கும் அடிப்படை ஊடகங்கள் ஈட்டுகின்ற வருமானம் எல்லாம் கூகுள் அட்சென்சில் பலர்வருமானம் பார்ப்பதற்கும் கூட விளம்பரமே அடிப்படை ஒருபோதும் மறவாதீர். நமக்கு கிடைத்தன இரு நிறுவனங்கள் ஒன்றன் பெயர் தமிழில் காசளிப்பு உமக்கு மற்றொன்று தமிழில் காலக்காசுகள் காசளிப்புஉமக்கு நிறுவனத்தில் இணைய https://www.coinpayu.com/?r=Kumarinadan இந்த இணைப்பு உமக்குதவும் விளம்பரப் பிட்காசுகள் நிறுவனத்தில் இணைய  https://r.adbtc.top/1724939 இந்த இணைப்பு உமக்குதவும் எப்போதும் உதவிக்கு என்னோடு இணைய kumarinadanr@gmail.com எனும்மெனது மின் அஞ்சல் உதவும் வருமானம் ஈட்ட ஒரு வகை கண்டோம் வாருங்கள் தமிழர்களே. சும்மா கொஞ்ச கொஞ்ச நேரம் விளம்பரத்தை பார்ப்பதற்கு வருமானம்.

Income

படம்
 இந்திய நடுவண் அரசு கிரிப்டோ கரண்சி எனப்படும் பிட்காயின்களுக்கு தடையை நீக்கியுள்ளதால் தற்போது இணையத்தில் கிரிப்டோ கரண்சி சம்பாதிக்க ஏராளாமான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  எல்லா நிறுவனங்களுமே வருமானம் தரத்தான் செய்கின்றன. ஆனால் அந்த வருமானம் ஐந்து காசு பத்து காசு என்ற அளவில்தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் சட்டோசி சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து இணைந்தால் ஆயிரம் சட்டோசி என்பது வெறுமனே ஏழு ரூபாய்தான். அந்த ஏழு ரூபாய்க்கும் பத்து பதினைந்து விளம்பரங்களைப் பார்க்க வேண்டும்.  கடந்த ஓராண்டு அனுபவத்தில் எனக்குக் கிடைத்தவை இரண்டு நம்பகமான நிறுவனங்கள். அதில் ஒன்றில், ஒவ்வொரு முறையும் பத்து டாலர் வருமனம் ஈட்ட முடியும்;. நான் பயன்பெற்று வருகிறேன். அந்த நிறுவனத்தில் வருமானம் ஈட்ட அன்றாடம் ஒரு அரைமணிநேரம் ஒதுக்கினால் போதும். மற்றொரு நிறுவனத்தில் பின்னால் இணைந்து முந்தைய நிறுவனத்திற்கு முன்பாகவே வருமானம் பார்த்து விட்டேன். அதில் ஒவ்வொரு முறையும் ஒரு டாலர் வருமனம் ஈட்ட முடியும்; முந்தைய நிறுவனத்தில் பத்து டாலர் ஆனபிறகுதான் வருமானம் தருவார்கள். பிந்தைய நிறுவனத்தில் ஒர...

வருமானம்

படம்
  இந்திய நடுவண் அரசு கிரிப்டோ கரண்சி எனப்படும் பிட்காயின்களுக்கு தடையை நீக்கியுள்ளதால் தற்போது இணையத்தில் கிரிப்டோ கரண்சி சம்பாதிக்க ஏராளாமான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  எல்லா நிறுவனங்களுமே வருமானம் தரத்தான் செய்கின்றன. ஆனால் அந்த வருமானம் ஐந்து காசு பத்து காசு என்ற அளவில்தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் சட்டோசி சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து இணைந்தால் ஆயிரம் சட்டோசி என்பது வெறுமனே ஏழு ரூபாய்தான். அந்த ஏழு ரூபாய்க்கும் பத்து பதினைந்து விளம்பரங்களைப் பார்க்க வேண்டும்.  கடந்த ஓராண்டு அனுபவத்தில் எனக்குக் கிடைத்தவை இரண்டு நம்பகமான நிறுவனங்கள். அதில் ஒன்றில், ஒவ்வொரு முறையும் பத்து டாலர் வருமனம் ஈட்ட முடியும்;. நான் பயன்பெற்று வருகிறேன். அந்த நிறுவனத்தில் வருமானம் ஈட்ட அன்றாடம் ஒரு அரைமணிநேரம் ஒதுக்கினால் போதும். மற்றொரு நிறுவனத்தில் பின்னால் இணைந்து முந்தைய நிறுவனத்திற்கு முன்பாகவே வருமானம் பார்த்து விட்டேன். அதில் ஒவ்வொரு முறையும் ஒரு டாலர் வருமனம் ஈட்ட முடியும்; முந்தைய நிறுவனத்தில் பத்து டாலர் ஆனபிறகுதான் வருமானம் தருவார்கள். பிந்தைய நிறுவனத்தில் ஒ...

வாருங்கள் இயங்கலையில் வருமானம் ஈட்டலாம்!

படம்
  கணினி துறையில் பயின்றவர்கள் நிறைய பேர்கள் இலட்சக்கணக்கில் இயங்கலையில் வருமானம் ஈட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். 1. கூகுள் அட்சென்ஸ் என்ற பிரிவில் நாம் வருமானம் ஈட்ட முடியும். கணினித்துறையில் படித்தவர்கள் பகுதி நேரமாகவோ, முழுநேரமாகவோ ஒரு இணைத்தளத்தைத் தொடங்கி கூகுள் அட்சென்ஸ் மூலமாக வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2. இன்னும் ஒரு சிலர் வலையொளியில் காணொளி பதிவிட்டு வருமானம் பார்க்கிறார்கள். இவையிரண்டுக்குமே நாம் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். அதற்கு பயிற்சி தருவாகச் சொல்லியும் சிலர் காசு பார்க்கிறார்கள். அவர்களிடம் சென்று நாமும் பயிற்சி பெற்று வருமானம் ஈட்ட முடியும். ஏமாந்து விடாமல் நல்ல நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  3. இந்த வகை வருமானம் பெற நான் உங்களுக்கு முழுமையாக உதவ முடியும். இந்திய நடுவண் அரசு கிரிப்டோ கரண்சி எனப்படும் பிட்காயின்களுக்கு தடையை நீக்கியுள்ளதால் தற்போது இணையத்தில் கிரிப்டோ கரண்சி சம்பாதிக்க ஏராளாமான விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  எல்லா நிறுவனங்களுமே வருமானம் தரத்தான் செய்கின்றன. ஆனால் அந்த வருமானம் ஐந்து காசு பத்து காசு என்ற அளவில்...

இயங்கலையில் வருமானம் ஈட்ட முடியும்!

படம்
கணினி துறையில் பயின்றவர்கள் நிறைய பேர்கள் இலட்சக்கணக்கில் இயங்கலையில் வருமானம் ஈட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ஒரு பத்து பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்களோ அல்லது கல்லூரி சென்றோ வீட்டில் இருந்தோ இளவல் பட்டம் படித்தவர்களோ இயங்கலையில் பணம் சம்பாதிக்க முடியும் என்று நிறைய விளம்பரங்கள் வருகின்றன ஆனால் ஒன்றில் கூட ஒற்றைக் காசு கூட சம்பாதிக்க முடியாது.  நாம் அந்த விளம்பரத்தைத் தேடித் தேடிப் பார்க்க அந்த இணையங்களின் முதலாளிகள் கூகுள் அட்சென்ஸ் என்கிற விளம்பர வகையில் வருமானம் பெற்று விடுகிறார்கள். அப்படியானால் கூகுள் அட்சென்ஸ் என்ற அந்தப் பிரிவில் நாம் வருமானம் ஈட்ட முடியும் போல இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றுகிறது இல்லையா? ஆம் முடியுந்தான. கணினித்துறையில் படித்தவர்கள் பகுதி நேரமாகவோ, முழுநேரமாகவோ ஒரு இணைத்தளத்தைத் தொடங்கி வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் வலையொளியில் காணொளி பதிவிட்டு வருமானம் பார்க்கிறார்கள். இவையிரண்டுக்குமே நாம் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். அதற்கு பயிற்சி தருவாகச் சொல்லியும் சிலர் காசு பார்க்கிறார்கள். அவர்களிடம் சென்று நாம் ஏமாந்து...

இந்தியா ஒரு வேளை இலங்கையை கைப்பற்றினால் ஐ.நா-வும், மற்ற நாடுகளும் நம் மீது என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பார்கள்? நம் நாட்டு மக்கள் இதை ஏற்று கொள்வார்களா? வெறுப்பார்களா?

படம்
இன்னொரு இராசராச சோழன் இந்தியாவின் ஆளுகைக்கு வரும்போதுதாம் உங்களின் இந்த எண்ணம் ஈடேறும். அவனுக்கு மட்டுமே புரியும்:- 1.இலங்கை மீது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கிற ஆர்வம். 2.இலங்கையில்- சிங்களவர்கள், உலக நாடுகள் ஆதரவுடன் ஈழத்தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே வைத்திருக்கும் அவலம். ஏனென்றால் அவன் முன்னமேயே இலங்கையைக் கட்டி ஆண்டவன். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் இராசராச சோழன் இலங்கையை மீட்டெடுத்து அங்கே ஒரு தமிழனின் ஆட்சியை நிறுவுவார். இந்தியாவில்- இலங்கையரின் இரத்த தொடர்பும், மதத்தொடர்பும், மொழித் தொடர்பும் மற்றும் கலாச்சார தொடர்பும் உள்ளவர்களே கடந்த காங்கிரசு ஆட்சியாளர்களும், நடப்பு பாஜக ஆட்சியாளர்களும். இவர்கள் எப்போதும் சிங்கள விரும்பிகளே. காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு என்பது போல சிங்களவர்கள் சீனாவோடும், அமெரிக்காவோடும் தொடர்பில் இருப்பதைப் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் அந்த மண்ணில் தமிழனின் கை சற்றும் உயர்ந்திட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி இராசராச சோழன் ஆட்சி இந்தியாவில் முன்னெடுக்கப் பட்டிருக்கும் போது ஐநாவே தமிழே உலகின் முதன்மொழி என்று முழக்கத் தொடங்கியிருக...

இந்தியாவில் வேலையின்மை நிலையை ஒழிக்க உங்களால் சில கருத்துக்கள் கூற முடியுமா?

படம்
ஒரு மனிதன் தனது குடும்ப வருமானத்திற்கும் வளர்ச்சிக்குமாக அவன் எடுக்க வேண்டிய முயற்சிகள்- உழவு, தொழில், வணிகம், தனித்திறன், ஒப்பந்தம், வேலை இப்படி ஆறு வகையின. நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டு நிலத்தை உழுது பயிர் விளைவிப்பது உழவு. அனைத்துத் துறைக்குமான கருவிகள் இயந்திரங்கள், இயந்திரங்கள் வடிவமைப்பது தொழில். விளைவித்த பயிரையோ, வடிவமைத்த கருவிகளையோ வாங்கி விற்பது வணிகம். நடிப்பது, பாடுவது, விளையாடுவது, வரைவது, எழுதுவது இவை தனித்திறன். ஒரு கட்டிடம், அல்லது ஒரு தொழிற்சாலை வடிவமைத்தல், கணினிமயமாக்கல், மின்மயமாக்கல் எல்லாம் ஒப்பந்த அடிப்படையில் முடித்துத் தருவது ஒப்பந்தம். இந்த அனைவரின் நிறுவனங்களில் உடலுழைப்புக் கூலியாகவோ, நிருவாகக் கூலியாகவோ சம்பளத்திற்கு அவர்கள் சொல்கிற வேலையை அவர்கள் சொல்கிறபடி செய்து தருவது வேலை. ஆக வேலையின்மை நிலை இல்லை என்பதாக ஏராளமான வேலைவாய்ப்புகளை இந்த நான்கு நிறுவனங்கள்தாம் உருவாக்கித்தர முடியும். இந்த நிறுவனங்களை அரசும் முன்னெடுக்கலாம். நீங்களும் நானும் கூட முன்னெடுக்கலாம். இந்த நான்கும் உடைமைகள் என்ற தலைப்பில் வரும். தமிழர் பெருமைகளை தமிழர் நடுவே நிலைநாட...

தலைமைத்துவத்திற்காக நீங்கள் யாரை மிகவும் மதிக்கிறீர்கள், ஏன் (குறிப்பிட்டு கூறுங்கள்)?

படம்
மாவீரன் பிரபாகரன் அவர்கள்: நாளது 26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5056 (26.11.1954) வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். உலகையே திரும்பிப் பார்க்கவைத்த மாவீரனாக பிரபாகரன் உருவெடுத்ததற்கான தொடக்க விதை அவரது இளம்அகவையில் நிகழ்ந்தது. ஒரு இராணுவ வீரன், ஒரு முதியவரை இரத்தம் பீறிட்டு வருவதையும் பொருட்படுத்தாமல் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த பிரபாகரன், தன் தந்தையிடம், ஏன்? இப்படி துன்புறுத்துகிறார்? என்று கேட்டார். அவரது தந்தையோ, நாம் ஒன்றும் செய்ய முடியாது? நம்மிடம் ஒன்றுமே இல்லை. ஆனால், அவர்களிடமோ இராணுவ பலமும் அதிகார பலமும் இருக்கிறது என்றார். உடனே பிரபாகரன், இதே இராணுவ பலத்தோடு இவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன் என்றார் சட்டென்று. சொன்னதுபோலவே, இலங்கை அரசப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் எனும் இராணுவக் கட்டமைப்பை உருவாக்கி உலகத் தமிழருக்கான தமிழீழ தேசத்தைக் கட்டிக் காத்தார். தமிழர்களின் வீரத்தை உலகுக்கே பறைசாற்றிய அந்த மாவீரனின் வரலாற்றுத் தடங்கள் சில... விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த...

சில நாடுகளில் சில அபத்தமான சட்டங்கள் யாவை?

படம்
சில நாட்டில் சில அபத்தமான  சட்டங்கள் என்ன? எல்லா நாட்டிலும் சட்ட அடிப்படையில் மாற்றம் தேவை. ‘அம்மா! அண்ணன் அடிச்சிட்டான்’ தாயின் தண்டனை நிறைவேற்றம்; அண்ணனுக்கு இரண்டு அடிகள். குற்றம் செய்யாமல் தாய் கொடுத்த தண்டனையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தந்தை வந்ததும் தொடர்கிறது மேல்முறையீடு. தம்பியின் பொய்க்குற்றச்சாட்டு அம்பலமாகிறது. அண்ணனை தாய் அரவணைக்கிறாள். பரிசுப் பொருள்களோடு தந்தையின் சமாதானம். இது தமிழ்க் குடும்ப ஐயாயிர ஆண்டுகால பழமையின் வெளிப்பாடு. இன்றைய அயலியல் சட்டசமுக அமைப்பின் சாராய வணிகம், வரி, வட்டி, இவைகளே அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமும் ஆகி- தமிழ்க் குடும்பத்தில் அமைந்த பெற்றோர் போல, மூன்றாவது வாதியாக சட்டசமூகம் நிறுத்தப்படுவது இல்லை. அதனால் மேல்முறையீட்டில் பொய் வழக்கு புலப்பட்டாலும் பாதிக்கப் பட்டவனுக்கு இழப்பீடு ஏதும் இல்லை. சீர் செய்ய- தமிழ்ச் சான்றோர்கள் எழவேண்டும்.

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

படம்
மந்திரத்தால் மரத்திலிருந்து மாங்காய் விழ வைக்க முடியுமா? என்று கேட்டால் முடியும் என்பதுதான் விடை. உங்கள் வீட்டில் ஒரு மாமரம் வளர்ந்திருக்கிறது. அந்த மரத்தில் நிறைய மாங்காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒருநாள் நீங்கள் அந்த மரத்தடிக்குச் சென்று இந்த மரத்தில் இருந்து எனக்காக ஒரு மாங்காய் விழவேண்டும் கேட்கின்றீர்கள். மாங்காய் விழாது. அப்படி ஒரேயொரு முறை கேட்டு உலகத்தில் யாராலும் மாங்காய் விழ வைக்க முடியாது. அப்படி விழவைத்துக் காட்டினால் அது வித்தை (மேஜிக்) அப்படி வித்தைக்காரர்கள் உலகத்தில் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மந்திரக்காரர்கள் அல்ல. ஆனால் உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மந்திரக்காரர்கள் தாம். நம் வாழ்க்கைக்காக நம் தலைஎழுத்தை நாம்தான் எழுதிக் கொள்கிறோம். நாம் மாங்காய் விழ வைப்பதற்கு அன்றாடம் மரத்தடிக்குச் சென்று, ‘இந்த மரத்தில் இருந்து எனக்காக ஒரு மாங்காய் விழவேண்டும்’ ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருநாள் நீங்கள் வியப்படைகிற படிக்கு மாங்காய் விழும். அல்லது யாராவது உங்கள் வீட்டிற்கு வந்தவர்கள், அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்கள், அல்லது அணில...

ஒரு கவர்ச்சியான நிதி ஊக்கத்தொகை உங்களுக்கு வழங்கப்பட்டால், உங்கள் பெயரை மாற்றுவீர்களா?

படம்
என்னுடைய பெயரே மாற்றப்பட்ட பெயர்தான். யாரும் இதுவரை வைத்துக் கொண்டிராத பெயராக தெரிவு செய்து அமைத்துக் கொண்டது மூன்றாவது நோக்கம். கணியக்கலை அடிப்படையில் தனிமுடிவு மற்றும் போரியல் என்கிற இயல்புக்கு உரிய எண் ஒன்பதில் என்னுடைய பெயரை அமைத்துக் கொண்டேன். அது இரண்டாவது நோக்கம். முதல் நோக்கம் என்னுடைய பெயர் தனித்தமிழில் இருக்க வேண்டும் என்பது. என்னுடைய பிள்ளைகளுக்கு அழகிய தனித்தமிழில் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறேன். உறவினர் பலரின் குழந்தைகளுக்கும் அழகிய தனித்தமிழ் பெயர்களை சூட்டியிருக்கிறேன். கேட்கும் நண்பர்களுக்கு அழகிய தனித்தமிழ் பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறேன். அனைத்து பெயர்களும் கணியக்கலை அடிப்படையில் இயல்புகளையும் தெரிவு செய்தே. இந்த நோக்கங்களுக்கு மாறுபாடு இல்லாமல் என்பெயரை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு பணம் தரவேண்டாம். நான் பரிந்துரைக்கிற ஓர் தமிழ் அமைப்புக்கு ஒரு இலட்சத்திற்கு குறையாமல் பணம் கொடுக்க வேண்டும்.

இந்த நாட்களில் நல்ல எழுத்துத் திறன் முக்கியத்துவத்தை இழக்கிறதா?

படம்
இல்லவேயில்லை! எழுத்தை கொண்டு வருகிற அமைப்பு முறைகள்தாம் முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல. இந்தியாவிலேயே அதிகமான கல்வெட்டுக்கள் கிடைப்பது தமிழில் மட்டுந்தாம். இது கல்வெட்டுகளில் எழுத்தைக் கொண்டுவருகிற அமைப்பு முறை. பனை ஓலைகளில் எழுதத் தொடங்கிய போது கல்வெட்டு எழுத்துமுறை முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல. பனை ஓலைகளில்தாம் தமிழர்தம் வரலாற்றை நிலைநிறுத்தும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் அனைத்தும் எழுதப்பட்டன. இது ஓலைகளில் எழுத்தைக் கொண்டு வருகிற அமைப்பு முறை. அடுத்து தாள்களில் எழுதி அச்சில் புத்தகமாக்கும், எழுத்தை கொண்டு வருகிற அமைப்பு முறை வந்த போது, பனை ஓலை எழுத்துமுறை முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல. இப்போது செல்பேசிகளில், கணினிகளில் மின் எழுத்துக்காக எழுதிக் கொண்டிருக்கிறோம். தாளில் எழுதி அச்சில் கொண்டுவரும் எழுத்துமுறை முதன்மைத்துவத்தை இழக்கிறதே அன்றி எழுத்துத் திறன் அல்ல. இணையத்தில், சொந்தமாக அமைத்துக் கொண்ட இணையத்தளத்தில் கூகுள் தேடுதளத்தில், முகநூல், கீச்சு, புலனம், படர...

பரதநாட்டியம் பெயர் காரணம் என்ன?

படம்
தமிழர் ஆடற்கலை நெடிய வரலாறு கொண்டது. முத்தமிழில் அதுதான் முதல்தமிழ். சைகை நிலை மொழி: நாடகத்தமிழ். கூவி அழைக்கிற அளபெடை நிலை மொழி: இசைத்தமிழ். உரைநடையாக இயல் படைக்கிற மொழி: இயற்றமிழ் என்று, உலக மொழிகளில் மொழி வரலாற்றை சைகை நிலையிலிருந்து போற்றிக் கொள்கிற ஒரே மொழி தமிழ் மட்டுமே. முதலாவதாக சைகை மொழியாக நாடகத்தமிழ் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கருத்துக்களை வெளியிட முன்னெடுக்கப்பட்டு பின்னர் கலையாக வளர்ந்து வந்து கொண்டேயிருந்தது. முதல் தமிழான நாடகத்தமிழ் கலை வடிவமாகிற போது நாட்டியம், ஆடற்கலை என்று பேசப்பட்டது. மேலும் தமிழர் ஆடற்கலையில் நூற்றுக்கணக்கான வடிவங்கள் முன்னெடுக்கப் பட்டன. பெரும்பாலான ஆடல்கள் குழுவாக ஆடப்படுபவை. அதில் தனித்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்த ஆடல் கலைதான் சதிர் ஆடற்கலை. அதனாலேயே தமிழர் ஆடற்கலைகளில் அது மட்டும் தனித்து வளர்ந்தது. அதில் காலங்காலமாக ஒவ்வொருவரும் கூடுதலான பாவனைகளை முன்னெடுத்தார்கள். சோழர்கள் அதை கோயில்களில் முன்னெடுத்தார்கள். அந்தக்கலைப் பெண்களை பார்ப்பனியர்கள் தவறாகப் பயன்படுத்திய நிலையில் அது தேவராட்டம் என்றெல்லாம் பேசப்பட்டு பொதுமக்களால் வெறுக...

தவறான புரிதல் இருக்குமிடத்தில் சொல்லப்படும் விளக்கங்கள் அர்த்தமற்றது என உணர்ந்திருக்கிறீர்களா?

படம்
நமது வட்டத்திற்கு தொடர்பில்லாதவர்கள் என்றால், நீங்கள் சொல்லுவது சரிதான். அவர்களுடைய தவறான புரிதல்களைப் பற்றிய கவலையும் இல்லை. அவர்களுக்கு விளக்கங்கள் சொல்ல வேண்டிய தேவையும் நமக்கு இல்லை. தமிழர்களுக்கு கிறித்துவ மதம், முகமதிய மதம், சீக்கிய மதம், கான்பூசியஸ் மதம், பௌத்த மதம், சமனமதம் குறித்து எந்தக் கவலையோ அதில் தவறான புரிதல்கள் இருப்பதாக யாராவது சொன்னாலும் அதைப்பற்றி கவலை கொள்ள வேண்டிய கட்டாயமோ எதுவும் இல்லை. ஆனால் ஹிந்துமதம் கொண்டிருக்கிற பல்லாயிரக் கணக்கான தவறான புரிதல்களை நாம் விளக்கம் சொல்லாமல், அவர்களுக்கு விளக்கம் சொல்லுவது பொருளற்றது (அர்த்தமற்றது) என்று விட்டுவிட முடியாது. இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழர்கள் யாரும் நடுவண் ஆட்சிக்கு முயலாத காரணத்தால், நிறைய தவறுகள் காங்கிரசாலும், பாஜகவாலும் முன்னெடுக்கப்பட்டு விட்டன, தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. என்தாய் எனக்கு ஊட்டிய தமிழையும், அது தருகிற பொருள் இலக்கணம் என்கிற வாழ்க்கை இலக்கணத்தையும் வைத்து என்னை அடையாளப் படுத்த விரும்புகிறேன். எனக்கு என் சமூகமாக கட்டமைத்த பொருள் இலக்கணம் உண்டு அதில் உரிப்பொருளாக தெய்வங...

தற்போது இந்திய கைபேசி சந்தையில் போட்டிக்கு கூட ஒரு இந்திய நிறுவனமும் இல்லாததற்கு காரணம் என்ன?

படம்
ஒருகாலத்தில் சுமார் 50விழுக்காடு சந்தையைக் கட்டுப்படுத்தி வந்த மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன், இண்டெக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் தற்போது தள்ளாடி வருகின்றன. அவைகளால் தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங், சீனாவைச் சேர்ந்த விவோ, ஓப்போ, சியோமி, அமெரிக்காவின் ஆப்பிள் ஆகியவைகளோடு  விலையில் போட்டி போட முடிந்த அளவிற்கு, தரத்தில் போட்டி போட முடியவில்லை. இந்திய அரசும் கூட அதற்கு உறுதுணையாய் அமையவில்லை. மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன், இண்டெக்ஸ் செல்பேசி வாங்கி விட்டு பழுதுநீக்கும் சேவை மையங்களிலேயே தவமிருந்தவர்கள், இப்போது இந்த வெளி நாட்டு பேசிகளை வாங்கியதால் அந்தத் தொல்லையில்லை என்று மகிழ்ச்சியாகப் பேசியும் வருடியும் மகிழ்கின்றார்கள்.

எஸ் வங்கி திவாலாகியதை போல சங்க காலத்தில் வங்கி போன்ற அமைப்புகள் திவாலாகியிருக்கிறதா? அதைப் பற்றி சங்கப் புலவர் எழுதிய பாடல் இருக்கிறதா?

படம்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். என்பது இந்தக் குறளின் பொருளாகும். பேங் என்பதற்கான சொல்கூட தமிழில் இல்லை. பேங் என்பதை நாம் ஒலிமாற்றம் செய்து தமிழில் வங்கி என்கிறோம். தற்காலத்தில் இணையங்களில் எளிமையாக இடுகைகளை பகிர்வுசெய்வது போல சங்க காலத்தில் பொருளை இல்லாதவர்களுக்கு பகிர்வுசெய்வது எளிமையாக நடந்தது. வள்ளல் தன்மை சங்க காலத்தில் பெரிதும் போற்றிக் கொள்ளப் பட்டது. எனவே கடன் கொடுத்து வாங்குதல் அதுவும் வட்டிக்கு கடன் கொடுத்தல் என்பதெல்லாம் பழந்தமிழரிடம் வழக்கமேயில்லை. பிற்காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக தஞ்சாவூர் புதுக்கோட்டை பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் மொய் வாங்கும் திட்டத்தில் கூட வட்டி வசூல் எல்லாம் கிடையாது. வருமான வரி, வரி ஏய்ப்பு, தண்டனை என்று பணத்தை புழங்க விடாமல் தடுக்கிற காரணம் பற்றியே வாரக்கடன் எல்லாம் சாத்தியமாகி வங்கி திவால் ஆகிறது.