இந்தியா ஒரு வேளை இலங்கையை கைப்பற்றினால் ஐ.நா-வும், மற்ற நாடுகளும் நம் மீது என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பார்கள்? நம் நாட்டு மக்கள் இதை ஏற்று கொள்வார்களா? வெறுப்பார்களா?

இன்னொரு இராசராச சோழன் இந்தியாவின் ஆளுகைக்கு வரும்போதுதாம் உங்களின் இந்த எண்ணம் ஈடேறும். அவனுக்கு மட்டுமே புரியும்:- 1.இலங்கை மீது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கிற ஆர்வம். 2.இலங்கையில்- சிங்களவர்கள், உலக நாடுகள் ஆதரவுடன் ஈழத்தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே வைத்திருக்கும் அவலம். ஏனென்றால் அவன் முன்னமேயே இலங்கையைக் கட்டி ஆண்டவன். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் இராசராச சோழன் இலங்கையை மீட்டெடுத்து அங்கே ஒரு தமிழனின் ஆட்சியை நிறுவுவார்.

இந்தியாவில்- இலங்கையரின் இரத்த தொடர்பும், மதத்தொடர்பும், மொழித் தொடர்பும் மற்றும் கலாச்சார தொடர்பும் உள்ளவர்களே கடந்த காங்கிரசு ஆட்சியாளர்களும், நடப்பு பாஜக ஆட்சியாளர்களும். இவர்கள் எப்போதும் சிங்கள விரும்பிகளே. காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு என்பது போல சிங்களவர்கள் சீனாவோடும், அமெரிக்காவோடும் தொடர்பில் இருப்பதைப் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் அந்த மண்ணில் தமிழனின் கை சற்றும் உயர்ந்திட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அப்படி இராசராச சோழன் ஆட்சி இந்தியாவில் முன்னெடுக்கப் பட்டிருக்கும் போது ஐநாவே தமிழே உலகின் முதன்மொழி என்று முழக்கத் தொடங்கியிருக்கும். இராசராச சோழன் முன்னெடுக்கும் வரலாற்று நியாயத்தை அது புரிந்து கொண்டு ஆதரவுப்படைகளை அனுப்பியே வைக்கும்.

மற்ற நாடுகள் எல்லாம் தாய்த்தமிழின் முதன்மையைக் கொண்டாடப் பழகியிருக்கும் மதமில்லா தமிழ்ச் சமுதாயத்தின் மாண்பை புரிந்து கொண்டிருக்கும். இராசராச சோழனின் ஈழத்தின் மீதான போர் ஆதிக்கப் போர் அல்ல. ஆண்ட தமிழினத்தின் உரிமை மீட்புக்கான போர் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும்.

நமது நாட்டு மக்கள், கங்கை கொண்ட சோழன் வாழ்க! கடாரம் கொண்ட சோழன் வாழ்க! என்று முழங்கியது போல, ஈழம் மீட்டெடுத்த சோழன் வாழ்க! என்று (இந்தியாவில் 22மொழிகளும் ஆட்சிமொழிகளாக முன்னெடுக்கப் பட்டிருக்க) இந்தியாவின் 22 மொழிகளிலும் முழங்குவார்கள். அந்த வெற்றியை கூகுள் டூடுள் வெளியிட்டு பாராட்டும்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

பாலியல் கல்வி

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்