பாலியல் கல்வி


கல்வி இரண்டு வகைப்படும். ஒன்று சமுதாயக் கல்வி. மற்றொன்று நிறுவனக்கல்வி. சமுதாயக் கல்வி புலமையைத் தருகிறது. நிறுவனக்கல்வி மதிப்பெண்களையும் சான்றிதழ்களையும் தருகிறது. 

நிறுவனக் கல்வியில் பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரவுகள் 1.தமிழ் (தாய்மொழி) 2.ஆங்கிலம் (பிறமொழி) 3.கணக்கு 4.சமுகவியல் (வரலாறு மற்றும் நிலவியல்) 5.இயல்அறிவு

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை விருப்பப்பாடமாக பட்டப்படிப்பாக முனைவர் படிப்பாக பயிற்றுவிக்கிறது நிறுவனக் கல்வி. அந்த படிப்பைப் படிக்க விரும்புவோரை நுழைவுத் தேர்வு வைத்து பலருக்கு மருத்துவம் கற்பதற்கான தடையை விதிக்கிறது நிறுவனக் கல்வியில் அதிகாரம் பெற்ற அரசு. 

இன்னும் சிறப்பாக- பாலியல் கல்வி என்ற ஒன்றைக் கல்விநிறுவனத்தின் மூலமாகத் தொடரப்பட வேண்டும் என்பது பலரின் பேசு பொருளாக இருக்கிறது.

நிறுவனக்கல்வி முன்னெடுக்கிற முதாலாவது படிப்பான 1.தமிழை (தாய்மொழி) சமுதாயக் கல்வி ஐந்து அகவைக்குள் பேசும் வகைக்கு கற்றுக்கொடுத்து முடித்து விடுகிறது. 

எழுதும் வகைக்கு மட்டுந்தாம் நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. மேலும் பட்டப்படிப்பு வரை நிறைய தகவல்களை படிக்க வைத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறது. அந்தச் சான்றிதழ் அவர்களுக்கு வேலையைத் தருகிறது.

நிறுவனக்கல்வி முன்னெடுக்கிற இரண்டாவது படிப்பான 2.ஆங்கிலத்தை, ஆங்கிலச் சமுதாயத்தோடு தொடர்பில் இருக்கிற வாய்ப்பு கிடைத்தால் ஏறத்தாழ ஓராண்டுக்குள்ளாக பேசும் வகைக்கு கற்றுக்கொடுத்து முடித்து விடுகிறது. 

பட்டப்படிப்பு வரையிலும்கூட எழுதும் வகைக்கு மட்டுந்தாம் கல்விநிறுவனம் பயிற்சி அளிக்கிறது. அவர்களைப் பேச வைக்க முடியவில்லை கல்விநிறுவனத்தால். அவர்களுக்கு அரைகுறை தகுதியோடு நிறுவனம் சான்றிதழ் வழங்குகிறது. அந்தச் சான்றிதழ் அவர்களுக்கு வேலையைத் தருகிறது.

நிறுவனக்கல்வி முன்னெடுக்கிற மூன்றாவது, நான்காவது படிப்பான 3.கணக்கு 4.சமுகவியல் (வரலாறு மற்றும் நிலவியல்) பாடத்தின் அடிப்படைகளை பேரளவாக கற்பித்து விடுகிறது சமூகம். கூடுதல் விரிவுகளைக் கற்றுக்கொடுத்து கல்விநிறுவனம்  சான்றிதழ் வழங்குகிறது. அந்தச் சான்றிதழ் அவர்களுக்கு வேலையைத் தருகிறது.

நிறுவனக்கல்வி முன்னெடுக்கிற ஐந்தாவது படிப்பான 5.இயல்அறிவை சமூகக்கல்வியாக, தனிமனிதர்களோ தொழிற்சாலைகளோ, உதவியாளர்களாக இணைத்துக் கொண்டு ஆழஅறிவனராக, நிறைய திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்கி விடுகிறது. 

இயல்அறிவின் அகலங்களை மட்டும் தகவல்களாக கற்பித்து கல்விநிறுவனம் சான்றிதழ் வழங்குகிறது. அந்தச் சான்றிதழ் அவர்களுக்கு வேலையைத் தருகிறது.

விருப்பப்பாடமாக பட்டப்படிப்பாக முனைவர் படிப்பாக கல்விநிறுவனங்கள் பயிற்றுவிக்கிற மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளும் சமுதாயத்தால் கற்றுக்கொடுக்கப்பட்டு கைமருத்துவம், வீட்டு மருத்துவம், உணவே மருந்து, மரபுமருத்துவர்கள் என்று பேரளவினரை உருவாக்கி விடுகிறது சமுதாயக்கல்வி. பொறியியல் சமுதாயக் கல்விக்கு- நிறைய பெரிய தொழிற்சாலைகளைத் தொடங்கும் தொழில் அதிபர்களாகவும் பேரளவினர் சமுதாயத்தில் இயங்கி வருகின்றனர். 

அந்தப் படிப்புகளைப் பட்டப்படிப்பாகவும் முனைவர் படிப்பாகவும் கல்விநிறுவனங்கள் கற்பித்து சான்றிதழ் வழங்குகிறது. அந்தச் சான்றிதழ் அவர்களுக்கு வேலையைத் தருகிறது.

இன்னும் சிறப்பாக- பலரின் பேசு பொருளாக இருக்கிற- பாலியல் கல்வி என்ற ஒன்றைக் கல்விநிறுவனத்தின் மூலமாகத் தொடரப்பட வேண்டும் என்கிற பாட்டையும், சமுதாயக்கல்வி திருமணம் என்கிற அமைப்பின் மூலம் கமுக்கம் உடையாமல் கற்பித்து வருகிறது. 

சமுதாயம், திருமணத்தின் மூலம், கமுக்கமான பள்ளிறையில், கற்பிக்கும் இந்தக் கல்வி, தலைவன் தலைவிக்கிடையிலான கூடலுக்கு மட்டும் தேவையானது. அதற்கு கல்விநிறுவனக் கல்வி எதற்கு?  அது தரும் சான்றிதழ்! சான்றிதழ் தரும் வேலை! என்பனவெல்லம் நகைப்பிற்குரியன அல்லவா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்