தலைமைத்துவத்திற்காக நீங்கள் யாரை மிகவும் மதிக்கிறீர்கள், ஏன் (குறிப்பிட்டு கூறுங்கள்)?
மாவீரன் பிரபாகரன் அவர்கள்: நாளது 26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5056 (26.11.1954) வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். உலகையே திரும்பிப் பார்க்கவைத்த மாவீரனாக பிரபாகரன் உருவெடுத்ததற்கான தொடக்க விதை அவரது இளம்அகவையில் நிகழ்ந்தது. ஒரு இராணுவ வீரன், ஒரு முதியவரை இரத்தம் பீறிட்டு வருவதையும் பொருட்படுத்தாமல் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த பிரபாகரன், தன் தந்தையிடம், ஏன்? இப்படி துன்புறுத்துகிறார்? என்று கேட்டார். அவரது தந்தையோ, நாம் ஒன்றும் செய்ய முடியாது? நம்மிடம் ஒன்றுமே இல்லை. ஆனால், அவர்களிடமோ இராணுவ பலமும் அதிகார பலமும் இருக்கிறது என்றார். உடனே பிரபாகரன், இதே இராணுவ பலத்தோடு இவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன் என்றார் சட்டென்று. சொன்னதுபோலவே, இலங்கை அரசப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் எனும் இராணுவக் கட்டமைப்பை உருவாக்கி உலகத் தமிழருக்கான தமிழீழ தேசத்தைக் கட்டிக் காத்தார். தமிழர்களின் வீரத்தை உலகுக்கே பறைசாற்றிய அந்த மாவீரனின் வரலாற்றுத் தடங்கள் சில... விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த