பாலியல் கல்வி
கல்வி இரண்டு வகைப்படும். ஒன்று சமுதாயக் கல்வி. மற்றொன்று நிறுவனக்கல்வி. சமுதாயக் கல்வி புலமையைத் தருகிறது. நிறுவனக்கல்வி மதிப்பெண்களையும் சான்றிதழ்களையும் தருகிறது. நிறுவனக் கல்வியில் பயிற்றுவிக்கப்படும் பாடப்பிரவுகள் 1.தமிழ் (தாய்மொழி) 2.ஆங்கிலம் (பிறமொழி) 3.கணக்கு 4.சமுகவியல் (வரலாறு மற்றும் நிலவியல்) 5.இயல்அறிவு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை விருப்பப்பாடமாக பட்டப்படிப்பாக முனைவர் படிப்பாக பயிற்றுவிக்கிறது நிறுவனக் கல்வி. அந்த படிப்பைப் படிக்க விரும்புவோரை நுழைவுத் தேர்வு வைத்து பலருக்கு மருத்துவம் கற்பதற்கான தடையை விதிக்கிறது நிறுவனக் கல்வியில் அதிகாரம் பெற்ற அரசு. இன்னும் சிறப்பாக- பாலியல் கல்வி என்ற ஒன்றைக் கல்விநிறுவனத்தின் மூலமாகத் தொடரப்பட வேண்டும் என்பது பலரின் பேசு பொருளாக இருக்கிறது. நிறுவனக்கல்வி முன்னெடுக்கிற முதாலாவது படிப்பான 1.தமிழை (தாய்மொழி) சமுதாயக் கல்வி ஐந்து அகவைக்குள் பேசும் வகைக்கு கற்றுக்கொடுத்து முடித்து விடுகிறது. எழுதும் வகைக்கு மட்டுந்தாம் நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. மேலும் பட்டப்படிப்பு வரை நிறைய தகவல்களை படிக்க வைத்து அவர்களுக்கு சான்றிதழ் வ