வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்

விடுதலை பெற்ற இந்தியாவில், வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்! என்று இந்தியாவில் பல பெரிசுகள் புலம்பும் போது, 'என்னயிது விடுதலை பெற்ற நாட்டில் அடிமை ஆட்சியைப் பற்றி புகழ்ந்து பேசுவது' என்று சிலருக்கு அருவருப்பாகக் கூடத் தோன்றலாம். 'அப்படியா? ஏன் அப்படி சொல்கின்றீர்கள்' என்று சிலருக்கு புருவத்தை உயர்த்தவும் தோன்றலாம்.
தந்தை பெரியார் கூட வெள்ளையர் ஆட்சியே தேவலாம் என்று சொன்னவர்தான். 
வெள்ளையன் ஆட்சியில் இந்திய மாநிலத்தவர்கள் அனைவருமாக ஒரு நியாயத்திற்குப் போகும் போது, அவன் முழுக்க நமக்கு அனைவருக்குமான அன்னியன் என்பதால், நியாயம் சொல்ல அவனுக்கு உண்மை மட்டுமே தேவைப் படுகின்றது. அவன் வழங்குகிற தீர்ப்பு உண்மையானதாக இருந்தது.
ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில், இந்திய மாநிலத்தவர்கள் அனைவருமாக ஒரு நியாயத்திற்குப் போகும் போது, நியாயம் சொல்லப் போகிறவன் இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு சொந்தக்காரன். 
ஒட்டு மொத்த இந்திய மக்களுக்காக ஒற்றை ஆணிகூட பிடுங்காத மோடி ஆட்சியில், குஜராத் மாநிலம் மட்டும் எல்லையில்லாமல் வளர்ந்திருக்கிறது.
சட்டத்திற்கு புறம்பாக ஹிந்தி மொழி வளர்ச்சி காங்கிரஸ்கட்சியில் பெரும்பான்மையாக இருந்த பார்ப்பனர்களால் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. 
காங்கிரஸ்கட்சியில், காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமாக இருந்த தமிழ் விரோத சக்திகள் தமிழீழக் கனவைக் குழிதோண்டி புதைத்திருக்கிறது. 
இந்தியாவின் எண்பது விழுக்காடு பொருளாதரத்தை ஈட்டித் தருவது தென்னகமாக இருந்த போதும் அனைத்து அதிகாரிகளும் வடவர்கள். இந்தியத் தலைநகரம் டெல்லியில், காரணம் காங்கிரசிலும் சரி, பாஜகவிலும் சரி வடவர் எண்ணிக்கை அதிகம்.
காங்கிரசில் அதிகமாக இடம் பெற்றிருக்கிற தமிழ் விரோத சக்திகளுக்கு, தமிழர்களிடம் இருந்து பிடுங்கி கச்சத்தீவை அந்நிய இலங்கைக்குக் கொடுக்க முடிகிறது. 
காவிரி பிரச்சனையில் எப்போதும் பாஜகவின் நியாயம் தங்களுக்கு சில தொகுதிகளாவது தருகிற கருநாடகத்திற்கு சாதகமாக இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்த வரை ஒரு சாபக்கேடு- இந்தக் கட்சிகளில் இருக்கிற தமிழர்களும் செம்மறியாட்டுக் கூட்டங்களாக கட்சியின் பாரபட்ச தமிழர்விரோத தீர்ப்புகளை ஆதரித்து தங்கள் கட்சிக்கு ஆதரவாக சோரம் போவார்கள். கூட்டணிக் கட்சிகளாக செயலாற்றிய திமுக, அதிமுக நிலை அதை விடக் கேவலம். 
இந்திய வரலாற்றில் முழுக்க முழுக்க தமிழக மாநிலக் கட்சியான பாமக மட்டுமே கூட்டணியை தமிழக நலனுக்காக, சமூக நீதியிலும், சில பொருளாதார நடவடிக்கைகளிலும் பயன் படுத்திக் கொண்டது.
இந்தியாவில் பாஜக. காங்கிரஸ். கையில் நடுவண் ஆட்சி இருக்கும் வரை, வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்! என்பது உண்மை, உண்மை.  
இந்தியாவில் அனைவருக்குமான நியாயம் உறுதி செய்யப் பட இங்கே தேவை மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம். சுபவீ தனது கூட்டங்களில் அடிக்கடி சொல்லுவார். மாநில அரசுக்கு சட்டமன்றத்தில் முளைக்கிற புல்லைப் பிடுங்கியெறியக் கூட அதிகாரம் கிடையாது; நடுவண் அரசின் அனுமதி பெற்றாக வேண்டும் என்று. ஆம் உண்மைதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்