நாவலந்தேயம்
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே
இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.
இந்தியா என்பது
பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலோ அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.
குமரிக் கண்டம்
முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர்.
அது உலகம் முழுவதும்
தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம்.
உலகம்-
தமிழர் இருப்பிடத்தை
அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம்.
உலகினர் தமிழர்
நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம்.
இந்தியா குறித்து
‘நாவலந்தேயம்’ என்ற
அறிமுகம் மட்டுமே இருந்தது.
அதைத்தான் உலகினர்,
ந்தேயம் -ந்தேயா - India என்று
பதிவு செய்தனர்.
அமெரிக்காவில்
ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே.
வடவர்கள் இந்தியா
என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்)
பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங் பாரதிய ஜனதா கட்சி என்பனவற்றை
ஒப்பு நோக்குங்கள்.
அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு
வாசுகோடகாமா இந்தியாவைத் தேடி வந்தடையும் போது-
ஆரியர் அராபியர்
மகமதியர் எல்லாம் நுழைந்து கலந்து விட்டதால்,
அவர்கள் வணிகத்
தொடர்புக்காகத் தேடிவந்த நாவலindiaம் இல்லை.
நாகரிகத் தமிழர் இல்லை.
பிந்தைய வரலாறு
நாம் அறிந்ததுதானே.
நாவலந்தேயத்தை-
ஆங்கிலத்தில் india என்கிறோம்
வடஇந்தியர்கள்
பாரத் என்றே எழுதுகின்றார்கள்
தமிழராகிய நாம்
தமிழில் நாவலந்தேயம் என்று எழுதுவதுதானே சரியாக இருக்க முடியும்!
கருத்துகள்
கருத்துரையிடுக