தமிழர் உடைமைகள் கட்டுவோம்!




உடைமை! தலைப்பில் இருந்து தமிழர்கள் விலகி பல ஆயிரம் ஆண்டுகளாகி விட்டன.

தமிழ்நாட்டின் வேளாண்மை, தொழில், வணிகம், கலை, கல்வி, என்று எந்தத் துறைக்கும் தமிழன் உடைமையாளனாக இல்லை. 

ஆனால் எல்லாத் துறைகளிலும் உலகளாவி தமிழன் இருக்கிறான்; உடல் உழைப்புக் கூலியாகவோ அல்லது நிருவாகக் கூலியாகவோ.
      
சுந்தர் பிச்சை அண்மைக் கால தமிழர் பெருமை. உலகின் மிகப் பெரிய நிறுவனத்திற்கே தலைவராம். உடைமைத் தளத்தில் பில்கேட்ஸ், அம்பானி என்று மட்டுமே பட்டியல் போடுவார்களாம்.
ஆனால் கூலித் தளத்திற்கு தமிழர்கள் மட்டுந்தானாம்.
      
அன்னியர் ஆட்சியில்தான் கப்பலோட்டிய தமிழன் உடைமையாளராக முயற்சித்தார் என்று செக்கிழுத்தார் என்றால் இன்றைக்கும் அப்படித்தான். 

தமிழன் தொழில் அதிபராகவோ, வணிகராக, வளர்ந்துவிடாமல் தடுக்க சட்ட நிருவாகத்தில் ஏழாயிரம் கிடிக்கிப் பிடிகள்.
சுயமாக முன்னேறி விடாமல் தடுக்க சாராயக் கடைகள்.
      
உடைமையாளனை உருவாக்க கல்வி கிடையாது. எல்லாக் கல்வி நிறுவனங்களும் நிருவாகக் கூலிகளை உருவாக்கவே. 

அந்தக் கல்வி நிறுவன முதலாளிகளாகக் கூட தமிழர்கள் வந்து விடமாட்டர்கள். 

நிருவாகக் கூலிகளை உலகளாவி உருவாக்குவதற்கென்றே ஆங்கில வழிக் கல்வி. 

தமிழன் உடைமை குறித்து சிந்திக்காத வரை தமிழனுக்கு விடிவேயில்லை.
      
கூலிக்காரனுக்கு முதலாளி மொழிதான் தேவை. நாய்களுக்கு வளர்ப்பவன் போடும் எலும்புக்காக அவன் மொழியைக் கற்று வாலாட்ட வேண்டிய தேவையிருகிறது.

நாயின் மொழி நாய்களோடு சண்டை போடுவற்கு வெறும் குரைப்பாக மட்டும் போதுமானது.
      
தமிழர்கள் உடைமை குறித்து சிந்திக்கும் போது மட்டுமே முதல் உடைமையான தாய்மொழியைக் தக்க வைக்கவைக்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாலியல் கல்வி

தீர்க்கவே முடியாது என்ற நோயை கூட தீர்த்து வைக்கும் மந்திரம் எது?

நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம்