தமிழ்மொழியில் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் 


அயலவர்களிடம் நமது உடைமையை ஒப்படைத்து விட்டு,
கொஞ்சம் கூடுதல் கூலியில் நம்முடைய சில குழந்தைகள் நிருவாகத் தளத்தில் இயங்கப்போகும் கனவில்,

நம்முடைய தமிழர்களிலேயே பெரும்பாலான குழந்தைகள் மிக மிகக் குறைந்த கூலியில் உடல் உழைப்புத் தளத்தில் நிற்கப் போகிற அவலத்தைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாய்
போட்டி போட்டுக் கொண்டு,

மழலையர்க் கல்வியிலிருந்தே ஆங்கிலம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

எத்தனை பேர் ஆங்கிலம் கற்பினும் சரி முதல் பத்து பேருக்கு மட்டும் தான் நிருவாகத் தளத்தில் இடம் அளிப்பர் (அளிக்க முடியும்) அயல் உடைமையாளர்கள்.

ஆங்கிலக் கல்வி கற்ற போதும் அடுத்த தொன்னூறு பேர் உடல் உழைப்புத் தளத்தில்தாம் நிற்க வேண்டியிருக்கும்; நின்று கொண்டுதாம் இருக்கிறோம்.

ஆனால் அயலவரிடம் நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒப்படைத்து விட்ட உடைமைத் தளத்தில் நூற்றுக்கு நூறு பேருமே இயங்க முடியும்.

ஆனால் உடைமைத் தளத்தில் இயங்குவதற்கு முதல் தேவை ஊக்கம்.

பிறந்த குழந்தை ஐந்து அகவை நிறைவடையும் போதே ஆயிரக் கணக்கான சொற்களைக் கட்டமைத்துப் பேசும் தன்னம்பிக்கையைத் தாய்மொழி மட்டுமே வழங்கவியலும்.
மூன்றாவது அகவையிலிருந்தே- அடிமைத் தளத்தில் இயங்குவதற்கான நிருவாக அறிவை வழங்க வல்ல ஆங்கிலத்தை,
ஆக்கஅறிவுக்கான தாய்மொழிக்கு மாற்றாக நிறுத்தினால் அந்தக் குழந்தையால் எதிர் காலத்தில் என்ன சாதிக்க முடியும்!

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்கள் உடைமைத் தளத்தில் இயங்கி உலகத்தை ஆண்டார்கள்.
இன்று நம் நிலையென்ன?

நம்தாய் நமக்கு தம் உயிர்க் காற்றைச் சொல்லாக்கி வழங்கிய,
தன்னம்பிக்கையின் தாயான தமிழ்மொழியை முதலில் கற்றுத் தேர்வோம்.

இதை கருத்துப் பரப்புதலாக முன்னெடுக்க இயலவே இயலாது.
ஆனால் ஒரேயொரு தனிமனிதன் கூட வென்றெடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் எந்தக் கல்வி நிறுவனத்திலும்
எக்காரணம் பற்றியும்
ஐந்தாம் வகுப்பு வரைக்கான கல்வியைத்
தமிழ்மொழியில் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுத்தால்.

அதற்காகப் பேசுவோம்; போராடுவோம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘ஆடற்கலை’யாகவும், ‘சதிர்’ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை பரதநாட்டியம் ஆக்கிய உருக்மிணி தேவி அருண்டேல்

முதல் பத்து உடைமையாளர்கள்

Income