ஆங்கில வெறி
ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற வெறி நிறைய தமிழர்களிடம் இருப்பதாக பட்டியல் இடுகிறோம், சாடுகிறோம், இழிவாகப் பார்க்கிறோம், மானங்கெட்டவனே என்று தூற்றுகிறோம். தமிழ்வழிப் பள்ளியில் கூட ஆங்கிலத்தை ஒரு பாடமாக வைத்து தேர்ச்சிக்கு மதிப்பெண் வைத்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பேர்கள் பள்ளி இறுதி வகுப்பைத் தாண்ட விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது யாரால்?
எப்படி?
ஏன் தொடர்ந்து நிறைவேற்றப் பட்டுக்கொண்டிருகிறது.
விடுதலை பெற்று 70 ஆண்டுகளாக இந்த வகையாக தடுக்கி விழுந்தவர்கள் தானே தம் பிள்ளைகள் படிப்பு பள்ளி இறுதி வகுப்போடு தடைபட்டு விடக்கூடாது என்கிற உத்வேகத்தில் ஆங்கிலக் கல்விக்கு துணை போக வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுக் கிடக்கின்றார்கள். விடுதலை ஆங்கிலேயர்கள் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டோம். ஆனால் விடுபடவில்லை; விடுபடத்தெரியவில்லை; விடுபட சிந்தித்தாக வேண்டும். 70 ஆண்டுகளை வீணே கழித்து விட்டோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக