இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘ஆடற்கலை’யாகவும், ‘சதிர்’ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை பரதநாட்டியம் ஆக்கிய உருக்மிணி தேவி அருண்டேல்

படம்
பழந்தமிழகத்தில் 'ஆடற்கலை'யாகவும், பிற்காலச் சோழர் காலத்தில் 'சதிர்'ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை தங்கள் இனத்தார் இழிவாகக் கருதியிருந்த நிலையில், அந்த நடனத்தை சிறப்புறக் கற்று, பரதநாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்து, அதை தங்கள் இனத்தார் பெருமையாகக் கொண்டாடும் கலையாக மாற்றிய பெருமைக்குரியவர் உருக்மிணி தேவி அருண்டேல்! பிரித்தானிய இந்தியாவில் மதுரை மாநகரில், நூற்றுப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர், உருக்மிணி தேவி அவர்கள். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். பழந்தமிழகத்தில் 'ஆடற்கலை'யாகவும், பிற்காலச் சோழர் காலத்தில் 'சதிர்'ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை தங்கள் இனத்தார் இழிவாகக் கருதியிருந்த நிலையில், அந்த நடனத்தை சிறப்புறக் கற்று, பரதநாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்து, அதை தங்கள் இனத்தார் பெருமையாகக் கொண்டாடும் கலையாக மாற்றிட முனைப்புடன் செயல்பட்டவர்.  விடுதலை பெற்ற இந்தியாவில், 42 ஆண்டுகளுக்கு முன்பு மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தவர் என்கிற சிறப