இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெருமளவான ஈழத்தமிழர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை ஆதரிப்பது ஏன்?

படம்
நண்பர் கோபிநாத் தமிழ்கோராவில் இந்த பதிலை எழுதியிருக்கிறார். இந்த பதிலின் ஒவ்வொரு எழுத்தையும் நான் அங்கீகரிப்பதால் இதை எனது மந்திரம் வலைப்பூவில் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.    ஈழத்தில் அரசியலே இருந்ததில்லை. நம்பமுடியவில்லையா? உண்மை அதுதான். தந்தை செல்வாவின் ( ஈழத்தின் காந்தி) காலத்தின் பின்பு தமிழர்கள் அரசியலை வெறுத்தார்கள். காரணம் இலங்கை அரசியலில்தமிழர்களின் உரிமைகள் எங்கும் இல்லை. அரசியல் மூலமாக எதையுமே பெறமுடியாது. கல்வியில் சிங்களப்பிள்ளைகள் எல்லாம் பல்களைக்கழகம் செல்ல தமிழ்ப்பிள்ளைகள் மிகப்பெரும் சவால்களை சந்திக்கவேண்டும். அப்படி அற்புதம் நிகழ்ந்தால் தான் செல்லமுடியும். உதாரணமாக 3s எடுத்த ஒருவர் சிங்கள தேசத்தில் பல்கழைக்களகம் சென்றால் இங்கே 2A B எடுக்கவேண்டும். இந்தக்கொள்கை வந்ததும் தமிழர்கள் கல்வியில் நம்பிக்கை இழந்து ஆயுதப்போராட்டத்தில் இணைந்தார்கள். ஆயுதப்போராட்டாம் வலுப்பெற்ற காலத்தில் ஈழத்தில் அரசியல் கட்சிகளோ தலைவர்களோ எல்லாம் இல்லை. அது சிங்கள தேசங்களில் நடக்கும். சிங்கள மக்கள் தமக்கான தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஈழத்தில் நிர்வாகத்தை புலிகள் நடத்தினார்கள். உண்