வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்
விடுதலை பெற்ற இந்தியாவில், வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்! என்று இந்தியாவில் பல பெரிசுகள் புலம்பும் போது, 'என்னயிது விடுதலை பெற்ற நாட்டில் அடிமை ஆட்சியைப் பற்றி புகழ்ந்து பேசுவது' என்று சிலருக்கு அருவருப்பாகக் கூடத் தோன்றலாம். 'அப்படியா? ஏன் அப்படி சொல்கின்றீர்கள்' என்று சிலருக்கு புருவத்தை உயர்த்தவும் தோன்றலாம். தந்தை பெரியார் கூட வெள்ளையர் ஆட்சியே தேவலாம் என்று சொன்னவர்தான். வெள்ளையன் ஆட்சியில் இந்திய மாநிலத்தவர்கள் அனைவருமாக ஒரு நியாயத்திற்குப் போகும் போது, அவன் முழுக்க நமக்கு அனைவருக்குமான அன்னியன் என்பதால், நியாயம் சொல்ல அவனுக்கு உண்மை மட்டுமே தேவைப் படுகின்றது. அவன் வழங்குகிற தீர்ப்பு உண்மையானதாக இருந்தது. ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவில், இந்திய மாநிலத்தவர்கள் அனைவருமாக ஒரு நியாயத்திற்குப் போகும் போது, நியாயம் சொல்லப் போகிறவன் இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு சொந்தக்காரன். ஒட்டு மொத்த இந்திய மக்களுக்காக ஒற்றை ஆணிகூட பிடுங்காத மோடி ஆட்சியில், குஜராத் மாநிலம் மட்டும் எல்லையில்லாமல் வளர்ந்திருக்கிறது. சட்டத்திற்கு புறம்பாக ஹிந்தி மொழி வளர்ச்சி காங்கிரஸ்கட