இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது?

படம்
  உலக மொழிகள் எல்லாமே தங்கள் மொழியை அடிப்படையான கட்டமைப்புகளோடு வளர்ப்பதற்கு முன்னாலேயே அடுத்த மொழியைச் சந்திக்க வேண்டிய நிலை அம்மொழிகளுக்கு அமைந்தது. காரணம் உலகினர் எல்லோருமே ஆற்றங்கரையைத் தேடி நாடோடி வாழ்க்கை மேற்கொண்டவர்கள்தாம். ஆகவே உலக மொழிகள் அனைத்திற்கும் ஒன்றோறொன்றான தொடர்புகள் மிகுதியாகவே காணப்படும்.  ஆனால் தமிழ்மொழியோ சங்கம் கண்டு உறுதியான கட்டமைப்பில் வளரும் வரை பிறமொழிகள் இருப்பதை அறியாமலேயே தனித்து வளர்ந்து கொண்டிருந்தது. காரணம் தமிழர் முப்புறம் கடல் சூழ்ந்து நான்காவது புறம் உலகப் பெரும்மலை அமையப்பெற்ற நாவலந்தேயம் என்ற பெரும்பகுதியை கொண்டிருந்ததும், தமிழர் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலையாமல், தாம் வாழந்த நிலம் நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும், தாழ்வான பள்ளமாக இருந்தாலும் அதனை வாழுமிடமாக்கிக் கொள்ளும் இயல்பினராய் இருந்தனர் என்பதும் ஆகும். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்கிற தமிழர்தம் நிலப்பகுப்பும்- நாடாகொன்றோ காடாகொன்றோ அவலாகொன்றோ மிசையாகொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.  என்கிற புறநானூற்றுப் பாடலும் இதற்கான சான்றுகள். உ